அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை ஆரம்பம்.அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கான கிளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து கிளையின் இணைப்பாளராக ப. பிரதீபனும், செயலாளராக எம். விக்னேஸ்வரனும் ஊழியர்களால் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அதே போல இக்கிளைக்கு நிர்வாக உறுப்பினர்களாக சுகாதார பிரிவில் வி. தர்மராஜாவும், வேலை பகுதியில் எம்.ஏ. அனஸும், பாதுகாப்பு பிரிவில் டி. பாஸ்கரனும், சாரதிகள் சார்பாக எஸ். கேதீஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக ஆலோசகராக க. பத்மராஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.
குட்ட, குட்ட தலை குனிந்த காலம் போய் விட்டது, அநியாயம், அக்கிரமம் ஆகியவற்றுக்கு பயந்த காலம் மலையேறி விட்டது என்று கிளை நிறுவப்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். மாநகர சபை நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள், எதிர்ப்புகள், கெடுபிடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் கிளையை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பதாக சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment