30 Jul 2022

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை – பெற்றோல் நிப்புவதற்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளை துவம்சம் செய்த காட்டுயானை.

SHARE

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபெற்றோல் நிப்புவதற்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளை துவம்சம் செய்த காட்டுயானை.

எரிபொருள் நிரப்புவதற்காக தரித்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளை காட்டுயானை உட்புகுந்து தாக்கி அழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பு மவாட்டம் போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்புவதற்காக வியாழக்கிழமை(28) மாலை வேளையிலிருந்தே மோட்டார் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை(29) இரவு அப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று வரிசையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டிகள் மீது தனது பலத்தைக் காண்பித்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டு யானை அப்பகுதியிலுள்ள புன்னக்குளம் கிராமத்தினூடாக கடந்து வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வரிசையில் வைக்கப்பட்டிந்த மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்ததில் 7 மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. அதில் 3 மோட்டார் சைக்கிள்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், ஏனைய 4 மோட்டார் சைக்கிள்களும், பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம சேவை உத்தியோகஸ்த்தர் தெரிவிக்கின்றார். இதனால் சுமார் 30 லெட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றுவதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்குமாக பெற்றோல் இன்றி மிகவும் தவித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோல் நிரப்புவதற்காகவே  எமது மோட்டார் சைக்கிள்களை வைத்தோம் எமது மோட்டார் சைக்கிள்களுக்கு தற்போது இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் கல்வியும், வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது எமக்கு மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்றுதான் உள்ளது. எமக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: