20 Jul 2022

களவாடப்பட்ட பெருந்தொகைப் பொருட்களும் சந்தேக நபர்களும் கைது.

SHARE

களவாடப்பட்ட பெருந்தொகைப் பொருட்களும் சந்தேக நபர்களும் கைது.

களுவாஞ்சிகுடி பகுதியில் களுவாடப்பட்ட பெருந்தொகைப் பொருட்களுடன் 5 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட வீடுகளில் களவாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், தங்க நகைகளையும், பொலிசார் திங்கட்கிழமை(18) மாலை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பில் பிரதான சந்தேக நபர் ஒருவரும், களவுகளுக்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் சந்தேக நகர்கள் 4 வரையும் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிசார் செவ்வாய்கிழமை(19) தெரிவித்தனர்.

இதன்போது பேபி மேத்திரங்கள், தோடுகள், வீட்டு உரிமையாளர்களின் அடையாள அட்டைகள்,  கேஸ் சிலிண்டர்கள் 6, டி.வி.டி பிளேயர் ஒன்று, 6500 பணம், உள்ளிட்டவற்றையும் பொலிசார் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் .பி.ரி.சுகந்தபாலசிவின் ஆலோசனையின் பெயரில்களுவாஞ்சிகுடி பிரதே உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயவர்த்தனவின் வழிகாட்டலில்களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி அபேயவிக்கிரமவின் தலைமைத்துவத்தின் கீழ் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜோய் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேக நபர்களையும்களவாடப்பட்டதாகக் கருதப்படும் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடுகுறித்த சந்தேக நபர்களையும்பொருட்களையும்நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: