மட்டக்களப்பில் சிகரட் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு--பல கடைகளில் சிகரட்கள் கண்டுபிடிப்பு.
சிகரட் பாவனையை மக்கள் மத்தியில் இல்லாதொழிக்கும் நோக்கில் மட்டக்களப்பு நகரில் சிகரட் விற்பனை நிலையங்கள் புதன்கிழமை(01) காலை சுற்றிவளைக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 15 கடைகள் சுற்றிவளைக்காப்பட்டு சிகரட் தேடுதல்கள் நடாத்தப்பட்டதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதாகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தேனீச்சாலை உட்பட நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையயங்களும் சோதனையிடப்பட்டன. சிகரட் விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதுடன் சிகரட் விற்பனை செயாத கடைகளுக்கு நற்சான்றிதழ் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் விடுதிக்கு முன்னாலுள்ள ஹோட்டலிருந்து பெருமளவான சிகரட்கள் கைப்பற்றாப்பட்டப்பட்டதுடன் குறித்த வர்த்தகருக்கு விழிப்பூட்டல் செய்யப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment