ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
திங்கட்கிழமை(06) தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி செயலாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதன் காரணமாக மாகானங்களை அதிகாரிகள் நிருவகிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கின்றது மக்கள் இதனால் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு, இடமாற்றம், உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெறுவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு அகக்காரணங்களும் புறக்காரணங்களும் இருக்கலாம் அதேவேளையில் முறையான வளங்கள் முகாமை செய்யப்பட வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது.
பல தரப்பினர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். அதே வேளையில் மாகாண சபைத் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவது போன்று உள்ளுராட்சி மன்றங்கள் மன்றங்களுக்கான ஆட்சிக் காலம் முடிவடைந்ததும் உரியகாலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கின்ற மக்களின் ஜனநாயகத் தன்மை பாதுகாக்கப்படும் குறிப்பாக உள்ளுராட்சி மன்ற காலம் முடிவடைந்து தேர்தல் நடத்தப்பட்டாமல் மீண்டும் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் அதிகாரிகளின் கைகளில் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுமானால் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment