ஓந்தாச்சிமடம் களவு தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் ஒருவர் கைது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தின் வீடு ஒன்றிலிருந்து அண்மையில் 85000 ரூபா பணமும், ஒரு கையடக்கத் தொலைபேசியும் களவுபோயிருந்தது. இந்நிலையில் அக்குறித்த களவுச் சம்பவம் தொடர்பில் களவுசெய்ததாகக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை(02) கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி.யோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து விசாரணைகள் முன்நெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment