கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியால் 29.05.2022 அன்று உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் ச.குகதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமிழரசு கட்சியில் இருந்து மக்களுக்காக பாடுபட்ட கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.க.துரைரெட்ணசிங்கம் அவர்களையும் , இது போலதமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான கோ.சத்தியசீலராஜா அவர்களையும் ,தமிழர கட்சியின் குச்சவெளி திரியாய் வட்டார கிளையின் முன்னாள் தலைவர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் கிண்ணியா பைசல் நகர் வட்டாரகிளை முன்னாள் தலைவர் மு. க. மஹ்ரூப் முன்னாள் வில்லூன்டி வட்டாரக்கிளை தலைவர் கனகமகேந்திரா ஆகியோரை நினைவு கோரி அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் டாக்டர்.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment