"சார ஸ்ரீ லங்கா" உணவுப் பாதுகாப்பு செயற்திட்டம்.
உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம், மற்றும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி என்பவற்றின் காரணமாக எமக்கான உணவை எமது மண்ணிலேயே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்ததே. மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள இவ் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பல திணைக்களங்களின் கூட்டிணைவில் வீடுகள், மற்றும் பிரதேச ரீதியாக சிறு பயிர்செய்கையை ஊக்குவிக்கும் "சார ஸ்ரீ லங்கா" உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் இறங்கியுள்ளது.
சிறு பயிர்ச்செய்கையை தனிப்பட்ட முறையிலோ, கூட்டு முயற்சியாகவோ செய்யும், அல்லது புதிதாக ஆரம்பிக்கவோ விரும்புவோர் உங்கள் பிரதேச மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவையும் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment