கண்ணகை அம்மன் கரகம் சதங்கையணி விழா.
மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாயைம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு களுதாவளை கிராம சிறுமிகளைக் கொண்டு பழக்குவிக்கப்பட்ட “கண்ணகை அம்மன் கரகம்” சதங்கையணி விழா புதன்கிழமை(08) இரவு களுதாவளை வாகரையார் வீதயில் இடம்பெற்றது.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், சுவாமி விபுலாந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கலாநிதி சு.சிவரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள், ஆலயங்களின் நிருவாகிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுமியர்களைக் கொண்டு பயிற்றப்பட்ட கரகம் வடிவமைக்கப்பட்ட களரியில் வைத்து சிறுமியர்களுக்கு காற்சதங்கை அணிவிக்கப்பட்டு, ஆற்றுகை செய்யப்பட்டன. இக்கரகத்தை களுதாவளையைச் சேர்ந்த த.சந்திரலிங்கம் அண்ணாவியார், சி.க.தெய்வநாயகம் ஏடு அண்ணாவியார் குழுவினர், சி.கிஷோவர்மன் மற்றும் ம.ஷகிர்தனன் ஆகின மத்தளக் கலைஞர்கள் பழக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வருடாந்தம் நடைபெறும் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உத்சவத்தை முன்னிட்டு இவ்வாறு களுதாவளைக் கிராமத்தில் சிறுமியர்களைக் கொண்டு கண்ணகை அம்மான் கரகம் அரங்கேற்றப்படுவது வழக்கம் கொவிட – 19 காரணமாக கடந்த இரு வருடங்களாக இக்கரகம் அரங்கேற்றம் செய்யப்படாமலிருந்து வந்தன இந்நிலையில் இவ்வருடம் மீண்டும் அரங்கேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment