11 Jun 2022

உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்த பாகிஸ்தான் தூதுவராலயம்.

SHARE

உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்த  பாகிஸ்தான் தூதுவராலயம்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினரால் மேலும் ஒரு தொகை உலர் உணவு பொதிகள் கொழும்பு வாழ் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தினால் மூவினத்தையும் சேர்ந்த சுமார் 200 பயனாளிகளுக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு கொழும்பு மாளிகாவத்தை பிரதிப மண்டபத்தில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்கி கலந்து கொண்டதுடன் தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் குசும் ஹைஸர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய ஏழை மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை தூதுவரினால் வழங்கி வைக்கப்பட்டது. பிரதம அதிதியாக தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் பர்கி இவ்வாறு கருத்து தெரிவித்தார். ‘இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் நீண்டகால உறவு உள்ளது. இலங்கைக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவுள்ளோம். ஸகாத் ஸதகா போன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்க இஸ்லாம் மாதம் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆதனால் வசதியுள்ளோர் வசதி அற்றோருக்கு இவ்வாறானா காலப்பகுதியில் உதவிகளை வழங்குவது சிறந்தது.’





SHARE

Author: verified_user

0 Comments: