29 மாடுகள் மின்னல்தாக்கி பரிதாபகரமாக உயிரிழப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட உஹன பிரிவுக்குட்பட்ட திவுலான குளத்துக்கு அருகில் கடந்த செவ்வாய்கிழமை(21.6.2022) மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தால் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 29 மாடுகள் பரிதாபகரமாக இறந்துள்ளதாக வைக்கியல்ல பொலிசார் தெரிவிக்கின்றர்.
இவ்வாறு இறந்த மாடுகளில் கற்பிணிப் பசுக்கள், மற்றும் கறவைப் பசுக்களும், சிறிய மாடுகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறு உயிரிழந்த மாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குபட்பட்ட நவகிரி நகர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கால்நடை வளர்ப்பாளர்களுக்குச் சொந்தமானது எனவும், அவ்விருவரும் மொத்தமாக 30 மாடுகளை அப்பகுதியில வளர்த்து வந்ததாகவும், இம்மினல் தாக்கத்தினால் மீதமாக ஒரே ஒரு மாடு மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
திவுலானைப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் தமது கால்நடைகளை மிக நீண்ட காலமாகவிருந்து வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment