3 Jun 2022

18 வைத்திய அதிகாரிகள் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு மட்டக்களப்பில் நியமனம்.

SHARE

18 வைத்திய அதிகாரிகள் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு மட்டக்களப்பில் நியமனம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளுக்கு 18 வைத்திய அதிகாரிகள் நியமனம் பெற்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் செவ்வாய்கிழமை(31) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வின்போது வைத்தியங்கள் தமது கடமைகளை பெறுப்பேற்றுள்ளனர்.

நீண்ட காலமாக ஆளணியற்று காணப்பட்ட வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, மாங்கேணி வைத்தியசாலை, மீராவோடை வைத்தியசாலை, காங்கேயனோடை வைத்தியசாலை, திக்கோடை வைத்தியசாலை, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளுக்கே புதிதாக கடமையோற்ற வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுகாதார சேவையினை தம்மால் முடிந்தவரை மேம்படுத்த திடசங்கற்பம் கொண்டு தடைகளை உடைத்தபடி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்நோக்கி செல்லும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தனது தலைமையுரையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: