களுவாஞ்சிகுடியில் மும்மதத்தவர்ளுடன் நடைபெற்ற வெசாக் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், மற்றும் விசேட அதிரடிப்படை முகாம், ஆகியவற்றில் விசேட வெசாக் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(15) மாலை இடம்பெற்றிருந்தன.
பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரத்ன, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரம, விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரேமரெத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிற்றுண்டிகளையும், குடிபானங்களையும் வழங்கி வெசாக் நிகழ்வை அலங்கரித்தனர்.
இந்நிலையில் இந்நிகழ்வுகளில் வீதியில் பணித்த, தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களும், கலந்துகொண்டு அங்கு அலங்கரிப்பட்டுள்ள வெசாக் பதந்தல்களை கண்டு இரசித்து வருவதோடு, தாக சாந்தி நிகழ்வுகளிலும் பங்கெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment