முற்றாக முடங்கிய களுவாஞ்சிகுடி நகரம்.
நாட்டில் வெள்ளிக்கிழமை(06) கடைப்பிடிக்கப்படும் தொழிற்சங்க மற்றும் கடையடைப்பு கர்த்தல் காணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின களுவாஞ்சிகுடி நகர்பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும். பொதுச்சந்தை தனியார் மற்றும், அரச வங்கிகள் அனைத்தும் முற்றாக பூட்டப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை. எனினும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையிலீடுபட்டு வருவதோடு, அதில் பயணிகள் குறைவாக காணப்படுகின்றன. ஆனாலும் தனியார் போரூந்துகள் எதுவும் சேவையில் ஈடுபடவில்லை.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதனால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.
0 Comments:
Post a Comment