நள்ளிரவில் எரிபொருள் நிலையத்தில் இராணுவம் குவிப்பு—ஆரையம்பதியில் பெற்றோல் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு
நிலையத்தின் முன்னாள் வெள்ளிக்கிழமை (20) இரவு மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில்
ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு
நிலையத்தில் பெற்றோல் இருப்பு உள்ள நிலையிலும் பொதுமக்களுக்கு பெற்றோலை வழங்க மறுத்த
நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை
திருப்பயனுப்பினர்.
சனிக்கிழமை பெற்றோல் வினியோகிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து எதிர்ப்பு
நடவடிக்கை கைவிடப்பட்டது.
0 Comments:
Post a Comment