11 Apr 2022

சீனாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட் வகைகள் சுங்க அதிகாரிகளினால் அழித்தொழிப்பு.

SHARE

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சீனாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட் வகைகள் சுங்க அதிகாரிகளினால் அழித்தொழிப்பு.

சீனாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட் வகைகளை இலங்கை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி சட்ட விரோத பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் மூலம் அவற்றை அழித்தொழித்துள்ளனர்.

1,440 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட் வகைகளை இலங்கை புகையிலை கூட்டுத்தானத்தின் பரீசீலனைக்கு உட்படுத்திய பின்னர் இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  ஜெனரல் விஜித ரவிப்பிரிய தலைமையிலான சுங்க அதிகாரிகள் இவற்றை அழித்தொழித்துள்ளனர்.

இதன் போது இலங்கை புகையிலை கூட்டுத்தாபனத்தின் கட்டளை அதிகாரி மொனிஸா இப்றாஹிம் , இலங்கை புகையிலை கூட்டுத்தாபனத்தின் அதிகாரி  சுதேஸ் பீட்டர் , உதவி சுங்க அதிகாரிகளான ஏ.எம்.எஸ்.அமரசிங்க , எச்.பி.லொகுபாலசூரிய  ஆகியோர் கலந்து கொண்டனர்.


Attachments area
SHARE

Author: verified_user

0 Comments: