12 Apr 2022

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை.

SHARE

(சர்ஜின்) 

மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிமானி  விற்பனை சந்தை.

சமுர்த்தி அபிமானி அருணலு சந்தையும் விற்பனை கண்காட்சியும் நாடுபூராவும் நடைபெற்ற வருவதாக  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளதற்கு அமைவாக மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர திருமதி. தட்சனகௌரி தினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு  சமுர்த்தி அபிமானி அருணலு சந்தையும் விற்பனை கண்காட்சியும் ஆரம்பித்து வைத்தார்.  இதன் போது சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலயமும் இதன் போது திறந்து வைக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  திருமதி.மேனகா புவிக்குமார், கணக்காளர் மா.முகிலன்,  உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகரன் அவர்களும், பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம்,  சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  அ.குககுமாரன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வே.வரதராஜன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சி.தில்லையம்பலம், சமுர்த்தி முகாமையாளர்களான சந்திரகுமார், தவேந்திரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை  அமைப்புக்களின் தலைவர்கள்  மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: