போலிப் பிராச்சாரங்கள் பயத்தின் உச்சம் நிதி அமைச்சு நியமனம் தொடர்பிலான பதாதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது-இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி.
கௌரவ.இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சராக உள்ளார் எனக் குறிப்பிட்டு பதாதை ஒன்று மட்டக்களப்பில் காட்சிப்படுத்தப்பட்டமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து தெரிவித்த விடயம் தொடர்பில் வாலிப முன்னணி தலைவர் திரு.கி.சேயோன் அவர்களிடம் வினவிய போது...
இது வேண்டுமென்றே போலியான விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் உச்சத்தின் வெளிப்பாடாக மக்கள் இந்த அரசுகளுக்கு எதிராகவும் ஒட்டு அரசியல் குழுக்களுக்கு எதிராகவும் மக்கள் போராட துணிந்து இருக்கின்ற இக் காலகட்டத்தில் மக்களை திசை திருப்ப முயற்சியாகவே பார்ப்பதோடு இதனை தமிழ் மக்கள் அலட்டி கொள்ளத் தேவையில்லை என்பதோடு எமக்கான மக்களுக்கான போராட்டத்தில் மக்களோடு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி என்றும் களம் காணும் என்பதோடு போலிகளை கண்டு ஏமாற இன்னமும் மக்கள் தயாரில்லை என்பது நிதர்சனம்.இவ்வாறான பதாதைகள் அடிக்கும் பணத்தில் மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment