முதுமாணிப்பட்டம் பெற்ற கவிக்கோ வெல்லவூர் கோபால் கௌரவிக்கப்பட்டார்.
கவிக்கோ வெல்லவூர் கோபால் அவர்களுக்கு மதிப்புறு முதுமாணிப் பட்டத்தினை கிழக்குப் பல்கலைக்கழகம் வழங்கிக் கௌரவித்துள்ளது. அதனைப் பாராட்டும் வகையில் அவர் பிறந்த வெல்லாவெளிக் கிராமத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்புத் தமிழகத்தின் ஆய்வுத் தடத்தில் கவிக்கோ வெல்லவூர் கோபாலின் ஆய்வு ஆழப்பாய்ந்துள்ளது. இதுவரையும் பல்வேறு வகையான ஆய்வுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவை ஒவ்வொன்றும் மட்டக்களப்பின் அடையாளத்தினை மேலெழச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment