11 Apr 2022

அக்கரைப்பற்றில் ஆங்கில மொழி மூல க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு

SHARE

 (அஸ்ஹர் இப்றாஹிம்)

அக்கரைப்பற்றில் ஆங்கில மொழி மூல க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு.

சர்வதேச APEC நிறுவனத்தின் அனுசரணையில் அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை அதிபர் ஏ.பி.முஜீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு அண்மையில் இடம்பெற்றது.

விடுமுறை காலங்களில் மாணவர்களை கல்வியோடு தொடர்பில் இருத்தல் தொடர்பாக பிரதேசத்தில் தேர்ச்சிபெற்ற விரிவுரையாளர்களை கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி கருத்தரங்கில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலை , அல் முனவ்வரா கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலையைச் சேர்ந்த மாண மாணவிகள் 80 பேர் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: