களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் வெள்ளிக்கிழமை(8) நண்பகல் வேளையில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஏனைய ஊழியர்கள் அடங்கலாக பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதாகைகளை ஏந்தியவாறு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்னால் பேரணியாக வந்து கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மருந்துகளைத் தடையின்றி வழங்கு, ஆரோக்கியத்தை அழிக்காதே, எரிபொருளை தடையின்றி வழங்கு, பொருளாதார நெருக்கடியைச் சீர்செய், விலை அதிகரிப்பை உடனடியாகக் குறை, நாட்டை படுகுழிக்குள் தள்ளாதே, மக்களின் அசௌகரியங்களைப் போக்கு, வன்முறையைத் தூண்டாதே, பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதே, உள்ளிட்;ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
0 Comments:
Post a Comment