சமய தீட்சை வழங்கும் நிகழ்வு.
அகில இலங்கை சைவப்புலவர் சங்கமும், மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயமும் இணைந்து சமய தீட்ஷை வழங்கும் நிகழ்வு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்றது. இதன்போது சிவஸ்ரீ பாலதீஸ்வர சர்மா அவர்கள் கலந்து கொண்டு தீட்சை வழங்கினார்.
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவர் சைவப்புலவர் கார்த்திகேசு கமலநாதன் (விரிவுரையாளர்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் உபதலைவர் சைவப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர், சிந்தாந்தரத்தினம், திருமதி சிவானந்தமோதி ஞானசூரியம் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தீட்சை பெற்ற 28 பேருக்கும் நித்திய கரும் விதிகள் அடங்கிய புத்தகமும், தீட்சை பெற்றமைக்கான சான்ழிகழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment