சோபை இழந்த இம்முறை சித்திரை வியாபாரம்.
சித்திரை வருடப்பிறப் பிறப்பை முன்னிட்டு வியாபாரம் பெரிதும் கழைகட்டவில்லை, இமுறை சித்திரை வியாபாரம் சோபை இழந்துள்ளது. என வியாபாரிகளும், வர்த்தகர்களும், ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர் படுவாங்கரைப் பிரதேச மக்கள் உள்ளிட்ட அப்பகுதியில் அமைந்துள் அனைத்து பிரதேச மக்களும், பொருட்கொள்வனவு செய்யும் இடமாக விளங்குகின்றது.
தற்போதைய நிலையில் இவ்வருடம் சித்திரை வருடப்பிறைப்பை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவில் அதீத அக்கறை காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களிடம், வருமனமில்லை, பொருட்களின் அதிக விலையுயர்வே இதற்குக் காரணம் எனவும் வியாபாரிகளும், பொதுமக்களும், தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்றயத்தினமும், களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலைங்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருளுக்காகக் காத்திருந்தனர். பின்னர் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் எரிபொருட்கள் வாகனங்களுக்கு வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment