12 Apr 2022

மட்டக்களப்பு கல்முனை பிதான வீதியில் பாரிய விபத்து.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிதான வீதியில் பாரிய விபத்து.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை(11) இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் 4 படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவிபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது….

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தும், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனைப் பக்கம் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த காரில் தாய், தந்தை, மற்றும் அவர்களுடை இரு பின்ளைகளும் பயணித்துள்ளனர்.

காரில் பயணித்த 4 வரும், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து இடம்பெற்ற பின்னர் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் அவ்விடத்தில் காணப்பட்டது. ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொரிஸ்நிலையப் பெறுப்பத்திகாரி அபேயவிக்கிரம தலைமையிலான பொலிசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்ததுடன், விபத்துச் சம்பவம் குறித்து விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: