தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு
தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில்
செவ்வாய்கிழமை (26) இடம்பெற்றது.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபமேற்றி, மலரஞ்சலி
செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளடங்களாக
தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment