11 Apr 2022

நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த பிரமுகர்கள் சமாதானத் தூதுவர் விருது - 2022 ( peace Ambassadars ) வழங்கி கெளரவிப்பு.

SHARE


( அஸ்ஹர் இப்றாஹிம் )

நிலையான அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த பிரமுகர்கள் சமாதானத் தூதுவர் விருது - 2022 ( peace Ambassadars )  வழங்கி கெளரவிப்பு.

சர்வதேச கல்வி மற்றும் சுற்றுலா தொடர்பான ஆராய்ச்சி மாநாடு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது


சமாதான கற்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்த  இம்மாநாடு, அந் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

நிலையான அபிவிருத்திக்கும் சமாதானத்திற்கும் பங்களிப்பு செய்த முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்.எம்.எஸ்.சுபைர் , வலய கல்விப் ப





ணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா ,, எஸ்.எம்.அலியார் , கலாநிதி றிப்கி , கலாநிதி ஏ.ஜி.ஏ.றஹ்மான் , கலாநிதி எம்.ஆர்.சக்காப் , ராகு இந்திய குமார் ,திவாரி ஹெற்றிகே ஆகியோர் சமாதான தூதுவர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வெளிநாட்டமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனருமான ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.
 
அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: