29 Apr 2022

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவு தினம் - புலனாய்வாளர்களை விரட்டிய சாணக்கியன் எம்.பி.

SHARE

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 17 வது ஆண்டு நினைவு தினம்.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 வது நினைவு தினத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29)  மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் வைத்து மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராமின் உருவப் படத்திற்கு தீபம் ஏற்றி, மரல்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்h கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்..சுமந்திரன், கோ.கருணாகரம்(ஜனா), இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் .சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான .விரசன்னா, இரா.துரைரெத்தினம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் .சுரேஸ்,  ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது நிகழ்வை ஊடகவியலாளர்கள், புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களுடன் இணைந்து புலானாய்வாளர்களும். பொலிசாரும், சிவில் உடையில் வந்து ஊடகவியாலளர்களையும், மக்கள் பிரதியிதிகளையும் புகைப்படம் எடுத்தனர். இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகவியலாளர்களைத் தவிர இங்கு வேறு சிலரும் புகைப்படம் எடுக்கின்றனர் என அவர்களை அழைத்து நீங்கள் யார் எதங்காக புகைப்படம் எடுக்கின்றீர்கள், இறந்த ஊடகவியலாளர்களைத் தவிர மீதமுள்ள ஏனைய ஊடகவியலாளர்களையும், படுகொலை செய்யவா புகைப்படம் எடுக்கின்றீர்கள், என கடும் தொணியில் வினவினார் அதற்கு தாங்கள் பொலிஸ் ஊடகம் என பதிலளித்துவிட்டு அவர்கள் நகர்ந்தனர்.  இறுதியில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.

















































SHARE

Author: verified_user

0 Comments: