25 Mar 2022

சர்வதேச மகளிர் தின நிகழ்வை யொட்டிய நிகழ்வு

SHARE

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவு மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வை யொட்டிய நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ( 22 )  பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஸி.எம்.ஹனீஃப் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.என்.எல்.சித்தி பஸீலா ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.இதில் நிந்தவூரைச் சேர்ந்த பத்து மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் சிறந்த சேவையாற்றிய 30 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் பிரதேசத்தின் 20 பெண் ஆளுமைகளுக்கான கௌரவமும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. மாதர் அபிவிருத்தி சங்கங்களின் 12 பேருக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

முதலையுடன் போராடி சிறுவன் ஒருவரின் உயிரை காப்பாற்றிய சிங்கப்பெண் நிந்தவூர்-7 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி உம்மு சலாமாவின் வீரத்திற்கு விஷேட விருது வழங்கப்பட்டது. மேலும் தையல் போதனாசிரியை றஹீமா நிசாருக்கும் விசேட விருது வழங்கப்பட்டது.

இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் அவர்களும் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், திருமதி. ரீ.ஜெஸான், கணக்காளர் திருமதி. எஸ்..எல்.சாஜிதா பர்வின் மற்றும் விசேட அதிதிகளாக அம்பாரை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.ஏ.நாஹிப் அவர்களும் அம்பாரை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.டி.எதிரிசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட பீடாதிபதி கலாநிதி சபீனா கஸ்ஸாலி, சட்டத்தரணி ஜே.பாத்திமா ஆகியோரால் பெண்களுடன் தொடர்பான சமகால தலைப்புகளில் விஷேட உரைகளும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: