சௌபாக்கியா உற்பத்திக் கிராம பயனாளிகளுக்கு" உடல் மற்றும் உள ஆரோக்கியம்" தொடர்பான செயலமர்வு.
உள்நாட்டு உற்பத்தியுடன் கூடிய வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் செயற்திறன் மற்றும் வினைத்திறன் கொண்ட அறிவுபூர்வமான சமுர்த்தி பயனுகரிகள், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் அதிக சாத்தியங்களை கொண்ட கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சௌபாக்கியா உற்பத்திக் கிராம பயனாளிகளுக்கு" உடல் மற்றும் உள ஆரோக்கியம்" தொடர்பான செயலமர்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.சம்மாந்துறை பிரதேசத்தைச் சேரந்த சமூர்த்தி பயனாளிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வளவாளராக உளவியல் நிபுணர் மனூஸ் அபூபக்கர் கலந்து பல பயனுள்ள விடயங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.
0 Comments:
Post a Comment