25 Mar 2022

சிறுபோக வேளாண்மைக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்.

SHARE

சிறுபோக வேளாண்மைக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (23) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி பணிப்பாளர் வீ.பேரின்பராசா, இரண்டு உரக் கம்பனிகளின் உயரதிகாரிகள்,  விவசாய போதனாசிரியர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உர விநியோக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மேலும் பல துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல்வேறு துறைசார் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விவசாயிகளின் நலன் நோன்புகை தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் எதிர்வரும் சிறுபோகத்தினை திறம்பட மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான சேதனைப்பசளையினை வழங்குவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கென இரண்டு உரக் கம்பனிகளை நியமித்துள்ளனர்.இதன் போது நோயற்ற ஒரு சமூகத்தின் நஞ்சற்ற உணவை நோக்கிய பயணத்தில் சிறு போக நெற்செய்கையாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலவச இயற்கை உர வகைகளின் பாவனை மற்றும் பயன்கள் குறித்த போகத்திற்கு தேவையான உர வகைகளின் அளவு போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.









SHARE

Author: verified_user

0 Comments: