இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் மட்.கிராங்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி கடந்த மூன்று தினங்களாக அப்பாசாலையில் நடைபெற்று இறுதி நிகழ்வு திங்கட்கிழமை(14) நிறைவு பெற்றது.
கிராங்குளம் விநாயகர் மகா வித்தியாலய அதிபரும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புப் கிளைச் செயலாளருமான சா.மதிசுதன், அவர்களின் ஒழுங்கமைப்பில், இலங்கைச் செஞ்சிலுவை சங்கத்தின் மண்முனைப் பற்றுப் பிரதேச
தலைவர் க.நவநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அச்சங்கத்தின் மட்டக்களப்புக்கிளைத் தலைவர் த.வசந்தராசா, பொருளாளர் வ.சக்திவேல், முதலுதவிப் பயிற்றுவிப்பாளர் ஆ.சோமசுந்தரம், மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்த கொண்டிருந்தனர். இதன்போது அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளும். செயன்முறைகளும், மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment