உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் காசநோய் தடுப்பு சுகாதாரப் பிரிவு அதன் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.திலிப் மபாஸ் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் ( 24 ) பணிமனையின் முன்றலில் இருந்து ஆரம்பித்து கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றல் வரை இடம்பெற்றது.இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் , பிரதி பணிப்பாளர் ,டாக்டர் எம்.பி.ஏ.வாஹிட் , தொற்றாநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஸாத் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் , பிரதேச வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , அலுவலக உத்தியோஸ்தர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment