சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் வெள்ளிக்கிழமை (18) மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி
நகரங்களில் அதிகளவிலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்பட்டிருந்த .கடை மூடப்பட்டுள்ளது என எழுதப்பட்ட பதாதைகள் ஹோட்டல்களுக்கு முன்னால் போடப்பட்டுள்ளன.
இதே நேரம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் சில ஹோட்டல்களில் விறகு அடுப்பின் மூலம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் நடவடிக்கை இடம் பெற்றதை காணமுடிந்தது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிhல் ஹோட்டல் உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment