2 Mar 2022

அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தே ஆக வேண்டும் என்பத்தில் மக்கள் குறிக்கோளாக இருந்தார்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தே ஆக வேண்டும் என்பத்தில் மக்கள் குறிக்கோளாக இருந்தார்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தே ஆக வேண்டும் என்பத்தில் மட்டக்களப்பு மக்கள் குறிக்கோளாக இருந்தார்கள் இந்நிலையில்தான் எனக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்து மக்களுக்குச் சேவையாற்ற முடிந்துள்ளது. என  - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு சேவலைத்திட்டத்தின் கிராமிய பாலங்கள் அமைகும் செயற்பாட்டின்கீழ்  பெரியகல்லாறு கிராமத்தில் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் ஒன்றரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள, பாலத்திற்காக அடிக்கல் நடும் நிகழ்வு புதன்கிழமை(02) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் எமது சேவையை வழங்கி வருகின்றோம். மக்கள் மத்தியில் வீடு, மலசலகூடம், விளையாட்டு, கல்வி, உள்ளிட்ட பல விடையங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இவைகளை இனம்கண்டு நிறைவேற்ற வேண்டிய பொறுகப்பு எமக்குள்ளது. வெறுமனே அரசியலில் பேசிப்பேசி காலத்தை இழுத்தடிப்புச் செய்து கொண்டு செல்வதனால் கிழக்கு மாகாணத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிச் செல்லும் சமூகமாக தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள். எமக்கிருக்கின்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டு மக்களின் தேவைகளை அவர்களின் காலடிக்குக் கொண்டு செல்வது எமது கடமையாகும்.

மட்டக்களப்பில் தற்போது 2பில்லியனுக்கு அதிகமான நிதியில் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றன. 17பாலங்கள் அபிவிருத்தியில் 9பாலங்கள் முன்றாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து கொவிட்-19 பெரும் சவாலாக உள்ளது. அடுத்து ரசிய உக்ரைன் மோதல். இந்நிலையில் அங்கு நடைபெறுகின்ற யுத்தம் மூன்றாம் உலகமாகாயுத்தமாக மாறலாம் என சில அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். அந்த சூழல் உலகில் நடைபெறக்கூடாது.

அதபோல் நீண்டகாலமாக எமது மக்களிடம் இருக்கின்ற பிரச்சனைகளை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்ய முடியாது. அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டும். நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வு, இன்னென்று குறுகிய காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டிய தீர்வு, அடுத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தீர்வுகளை வழங்குது. ஆகிய பெறிமுறையில் தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இவற்றைத்தான்












நாம் தற்போது கவனமாக முன்னெடுத்துள்ளளோம். உரிமை சார்ந்த அரசியலும், அபிவிருத்தி சார்ந்த அரசியலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதுதான் கிழக்கில் எமது சமூகத்தைப் பாதுக்காத்துக் கொள்ள முடியும். இல்லையேல் எமது மாகாணத்தில் இன்னும் பின்னடைவைத்தான் சந்திக்க வேண்டிவரும்.

என கருத்துத் தெரிவித்த அவர் கடந்த காலத்தில் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்திற்குக் கொண்டு சென்றவர்கள்தான் எமது அரசாங்கத்தைப் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். மத்தியவங்கி கொள்ளை என்பது கிட்டத்தட்ட முழு நாட்டையே கொள்ளையடித்ததற்குச் சமனாகும். இந்த நிலையில்தான் எமது அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது. இந்நிலையில் கொவிட்-19, தந்போது இடம்பெறுகின்ற ரசிய உக்ரைன் மோதல் உள்ளிட்ட வைகள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. எனினும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்கு தங்கு தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.         

SHARE

Author: verified_user

0 Comments: