அதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சித்திரைப்புத்தாண்டு சந்தை நேற்று (24) திகதி கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.சத்தியநாதன் அவர்களது ஒழுங்கமைப்பில், பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு பிராந்திய பொதுமுகாமையாளர் வீ.ஜீ.டபிள்யு.அத்துலகுமார தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சித்திரைப்புத்தாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் குறைந்த விலையில் தரமான அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்கும் நோக்கில் மூன்று நாட்களுக்கு குறித்த சந்தை இடம்பெறவுள்ளது.
விவசாய நவீன மயமாக்கள் திட்டத்தின் கீழ் பெண் சுயதொழில் முயற்சியாளர்களை உள்வாங்கி அவர்களை வலுப்படுத்தும் முகமாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊடாக கடன்களை குறைந்த வட்டிக்கு வழங்கி பெண் சுய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குறித்த புத்தாண்டு சந்தை திறப்பு விழாவில் காவியா பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி.அஜித்குமார், மாநகர சபை உறுப்பினர்கள், கைத்தொழில் அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பில் உள்ள
பிரதேச அபிவிருத்தி வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment