28 Mar 2022

வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஏப்ரல் 2 இல் திருகோணமலையில் கராட்டே பலப்பரீட்சை.

SHARE


( அஸ்ஹர் இப்றாஹிம்)

வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் ஏப்ரல் 2 இல் திருகோணமலையில்  கராட்டே பலப்பரீட்சை.

கிழக்கு மாகாண கராட்டே சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான கராட்டே சுற்றுப் போட்டி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை மக்கெய்ஸர் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இதில் 14 வயதிற்கு மேற்பட்ட , 16 வயதுக்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட , 18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட , 21 வயதிற்கு மேற்பட்ட வயதுப்பிரிவுகளில் பெல்ட் மற்றும் கிலோ அடிப்படையிலும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

1999 வரை இச் சுற்றுப்போட்டியில் இணைந்த வடகிழக்கு மாகாண அணியாக கலந்து கொண்ட மேற்படி இரு மாகாணங்களும் 2007 ஆம் ஆண்டின் பின்னர் அரசியல் காரணங்களினால் வடக்கு மாகாணம் தனியாகவும் கிழக்கு மாகாணம் தனியாகவும் போட்டிகளில் ஈடுபட்டு வந்தன.

பழைய உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலும் இச்சுற்றுப் போட்டி அமையப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண கராட்டே சம்மேளனத் தலைவர் ஏ.ஆர் முஹம்மட் இக்பால் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: