25 Feb 2022

மின்சாரத் தடை உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏறாவூர் நகர சபையில் கவலை தெரிவிப்பு.

SHARE

மின்சாரத் தடை உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏறாவூர் நகர சபையில் கவலை தெரிவிப்பு.

நாளுக்கு நாள் நாட்டின் நிலைமை மோசமடைந்து வருகின்றது. அது தற்சயம் அமுல்படுத்தப்படும் மின்சாரத் தடை காரணமாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏறாவூர்   நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

அச்சபையின் 47வது மாதாந்த அமர்வு நகர சபைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை 24.02.2022 இடம்பெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போதைய மின்சாரத் தடை காரணமாக மாணவர்களின் கல்வி முற்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு 6 மணி தொடக்கம் 10 மணிவரை மாணவர்கள் மீட்டல் செய்றபாடுகளில் ஈடுபடுகின்ற நேரங்களைக் குறி வைத்து மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது. இது அவர்களது பரீட்சைப் பெறுபேறுகளில் கணிசமான அளவு பின்னடைவை ஏற்படுத்தும். அது போதாக்குறைக்கு பகல் வேளையிலும் மின்வெட்டு.இதனிடையே,  மின்வெட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் திருட்டுச் செயல்களிலும் இன்னோரன்ன சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள். இருட்டு வேளையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள் சுதந்திரமாக உலாவுகின்றார்கள். துஷ்பிரயோகமும் இடம்பெறுகின்றது.

மின்வெட்டு நேரத்திலேயே ஏறாவூரில் உயர் தரம் கற்கும் மாணவனொருவன் காணாமல் யோயுள்ளான். அந்த மாணவனுக்கு என்ன ஆனது என்று இன்னமும் தெரியவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக நகர சபையின் வருமானம், மக்களின் வாழ்வாதாரம், ஜீவனோபாயம்,  தொழிற்துறைகள், கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. சொல்லப்போனால் மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். பாரிய தொழிற்சாலைகள் தொடங்கி அடி மட்டத் தொழிலாளி வரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் வீட்டிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி துல்லியமாகப் பிரதிபலிக்கின்றது” என்றார்.








SHARE

Author: verified_user

0 Comments: