நீர் வடிகட்டி வழங்கி வைப்பு.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தொற்றா நோயினால் ( சிறுநீரக நோய்) பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார மேம்பாட்டை வலுவூட்டி சுத்தமான நீரை பயன்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான "நீர் வடிகட்டி " வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய சமூக நீர் வழங்கள் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட காரியாலயப் பொறுப்பாளர் எம்.எல். முஸப்பிர் அவர்களின் ஏற்பாட்டில் அண்மையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் தலைமையில்.இடம்பெற்றது.நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நானயக்கார மற்றும்
கிராமிய நீர் வழங்கல் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த பெரேரா ஆகியோரின்
சிறுநீரக நோயாளிகளுக்கான நிவாரன வேலைத்திட்டத்தின் கீழ் வன ஜீவராசிகள்
பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல், உள்பாதுகாப்பு வேலைதிட்டங்கள்
அமைச்சின் ஊடாக இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட அனைத்து சிறுநீரக நோயாளிகளுக்கும்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் "நீர் வடிகட்டிகள் " வழங்கி
வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு வன சீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள்
மற்றும் அகழிகள் அமைத்தல், உள்ளக பாதுகாப்பு வேலைதிட்டங்கள் அமைச்சர் விமல திசாநாயக்க அவர்களின் பிரத்தியேக செயலாளர்
அஞ்சன திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அமைச்சர் விமல
திசாநாயக்க அவர்களின் பிரதேச இணைப்பாளர்கள், தேசிய சமூக நீர் வழங்கள் திணைக்களத்தின்
அம்பாரை மாவட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் மற்றும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
1 Comments:
Blackjack Review & Bonus - JT Rewards
› Casino › Casino Casino Blackjack is the most popular casino game in New 파주 출장마사지 Jersey. It has a solid reputation among NJ players 통영 출장안마 and is one of the best casino 강릉 출장안마 games 전주 출장안마 in the 충주 출장샵 state.
Post a Comment