கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
வரவு செலவில் முன்மொழிந்ததன் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைகள் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வுவொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவுகுட்பட்ட, ஆரையம்பதி செல்வாநகர் கோயில்குளம் கொலனி வீட்டுத்திட்ட இரண்டாம் குறுக்கு வீதியில் வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், அப்பகுதி கிரம சேவகர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், ஆகியேரின் ஒத்துழைப்புடன், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி ராதிகா சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இறைவணக்கம், தொணிப்பொருள் கீதம், இடம்பெற்றதைத் தொடர்ந்து, வரவேற்புரையும் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலும் இதன்போது கலந்து கொண்டிருந்த மக்களுக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரால் எடுத்துரைக்கப்பட்டு கிழக்குத் திசை நோக்கியவாறு திட்டம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment