வறக்காப்பொலயிலிருந்து மட்டக்களப்பிற்கு கடத்திவரப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது-பட்டா வாகனமும் மீட்பு.
வறக்காப்பொலியிலிருந்து மட்டக்களப்பிற்கு கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் மட்டக்களப்பு பார்வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
வியாழக்கிழமை (24) அதிகாலை 1.00 மணியளவிவ் கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்து பார்வீதியில் வைத்து சுமார் 45 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிமோ பட்டா வாகனம் யைடக்கத் தொலைபேசிகள்
உன்பனவும் மீட்கப்பட்டுள்ளன. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment