களுதாவளையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிராமத்திற்கான வேலைத்திட்டம்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக கிராமத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 100,000 அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டங்களில்
225 திட்டங்கள் மண்முனை தென் எருவில் பற்றுபிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவற்றில்
34 திட்டங்கள் களுதாவளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரும்
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சந்ரு, மற்றும் களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன்
அவர்களும் குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment