மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வும் பசுமை இலங்கைக்கான அங்குரார்ப்பண நிகழ்வும்.
74 வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு எருவில் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 75 மரங்கள் நடப்படும் "பசுமை - இலங்கை" அங்குரார்ப்பண நிகழ்வு அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களினால்
"பசுமை “ இலங்கை" தொடர்பாக சிறப்புரை வழங்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக ஒரே நேரத்தில் 75 மரங்கள் நடப்பட்டது. இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பசுமைக்கழக உறுப்பினர்கள் , கிராம உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள் .
தொடர்ச்சியாக 75 சூழல்சார் நிகழ்வுகள் பிரதேச செயலகத்தினால்
திட்டமிடப்படுள்ளது.
0 Comments:
Post a Comment