புதிய ஆண்டுக்கான காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணம் திங்கட்கிழமை(03) இடம்பெற்றது. அடை மழைக்கு மத்தியிலும் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் இந்த சத்தியப் பிரமாணம் இடம் பெற்றது.காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர்
தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலக நிருவாக அதிகாரி டாக்டர் நவலோஜிதன்.
உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா கணக்காளர் செல்வி எ.சித்ரா. பிரதி திட்டமிடல்
பணிப்பாளர் திருமதி பிரணவ சோதி. நிருவாக உத்தியோகத்தர்களான திருமதி ஜாயிதா ஜலால்தீன்.
எம்.எம.ஜரூப். சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட சமுர்த்தி
முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். கிராம உத்தியோகத்தர்கள்.சமுர்த்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். கள உத்தியோகத்தர்கள்
என அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது சத்தியப்பிரமானத்தை பிரதேச செயலாளர் உதய சிறீதர் வாசித்து அனைவரும் சத்தியப்பிரமானம்
செய்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலக நிருவாக அதிகாரி டாக்டர் நவலோஜிதனின்
சிறப்புரையும் இடம் பெற்றதுடன் சமூக பாதுகாப்பு ஒய்வூதியத்துக்காக அதிக அங்கத்தவர்களை
சேர்த்து வைத்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மர்சூக்கா, ஜெஸ்மின் மற்றும்
அனீசா ஆகியோருக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2022ம் ஆண்டை வரவேற்கும்
கேக் வெட்டப்பட்டது. இதன் போது உத்தியோகத்தர்களுக்கு இனிப்பு பண்டமும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment