அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் பொலிசாருக்கு மொழிப்பயிற்சிகள் மட்டக்களப்பில் ஆரம்பம்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் மொழி அறிவை மேம்மபடுத்தும் நோக்கில் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியும் தமிழ் பொலிஸ் உத்யோகத்தர்களுக்கு சிங்கள மொழிப் பயிற்சியும் வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பில்புதுவருடப் பிறப்பான சனிக்கிழமை(01.01.2022) ஆரம்பமாகின.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கல்லூரியின் பொறுப்பதிகாரி எஸ்.ரவிசசந்திரன் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிக்கான பொலிஸ உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் வைபவத்தில் பொலிஸ் பயற்சினக் கல்லூரி உதவிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துர் றஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஆறு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறிகளில் நாடளாவிய ரீதியில் கடமை புரியும் 250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.இவர்களுள் சிங்கள தமிழ் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
0 Comments:
Post a Comment