24 Jan 2022

சுகிர்தராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

SHARE

சுகிர்தராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

2006ஆம் ஆண்டு  திருமலையில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின  நிகழ்வு திங்கட்கிழமை(24) மட்டக்களப்பு  காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில்  நடைபெற்ற துடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட மும் இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் .தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் .சத்தியசீலன். இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமகே, மற்று ஏனைய அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளர் புத்திரசிகாமணி, மற்றும், முன்னாள் ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரனும் இணைந்து மலர்மாலை அணிவித்தனர். பின்னர் 16 நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதன்போது கலந்து  கொண்டோர், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், முகநூலில் கருத்துக்களை வெளியிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கோகுலதாசனின் விடுதலையையும், வலியுறுத்தி,  கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்பின்னர் நினைவு உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு வடக்குகிழக்கு மற்றும்  தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்


        














































































   

SHARE

Author: verified_user

0 Comments: