களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விஷேட பூஜை.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னித்து அனைத்து இந்து ஆலயங்களிலும் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று வரும் இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை(14) காலை 7 மணியளவில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment