மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, பிரதேச செயலகத்திலும் அரசபணிகள் ஆரம்பிக்கும் விசேடநிகழ்வுகள்.
இலங்கை அரசின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரச அலுவலகங்களில் இவ்வருட அரசபணிகள் ஆரம்பிக்கும் விசேடநிகழ்வுகள் 3ஆம் திகதி காலை நாடுபூராவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு,வவுணதீவு பிரதேச செயலகத்திலும்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இத் தினத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது முதலாவதாக
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்றைய கடமைகளை ஆரம்பிக்கும்
நிகழ்வானது இடம் பெற்றது.
இதன்போது நாட்டுக்காக உயிர்நீத்த தேசிய வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டதுடன், அதனையடுத்து அனைத்து உத்தியோகத்தர்களும் ஒருமித்த குரலில்
அரசாங்க சேவையின் சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக்கொண்டனர்.
அதனையடுத்து 2022 ஆண்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மக்களுக்கு வினைத்திறனுள்ள சேவையினை
வழங்குவதற்காகவும் புதுவருடத்தினை சிறப்பிக்கு முகமாகவும் பிரதேச செயலகத்தில் பசும்
பால் பொங்கல் பொங்கும் சம்பிரதாய நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் கொவிற் சுகாதார
நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டப் பணிப்பாளர், பொது சுகாதார பரிசோதகர், நிருவாக உத்தியோகதர் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment