14 Jan 2022

சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு.

SHARE

சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு.

மட்.நாவற்காடு கிராமத்தினை சேர்ந்த .மமே.நாவற்காடு நாமகள் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கற்கின்ற மாணவி சுரேஸ் மயூரா அவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் குண்டு போடுதலில் முதலாம் இடமும், பருதி வட்டம் வீசுதலில் மூன்றாம் இடத்தினையும் பெற்று, இளைஞர் கழக ரீதியில் தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும், கிராமத்திற்கும், பிரதேசத்திற்கும் புகழை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இவரின் இந்த சாதனையை நிலை நாட்டிய மாணவி சுரேஸ் மயூரா, மற்றும் அவரை நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் சுபாஸ், பயிற்றுவிப்பாளர் அவர்களுக்கும், அக்னிச் சிறகுகள் பேரவையின் ஆரம்பகால உறுப்பினர் .விஜேந்திரன் நிதி அனுசரணையில் வியாழக்கிழமை(13) .மமே.நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் அக்னிச் சிறகுகள் பேரவையால் பாராட்டி வாழ்த்தி  பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வார் .தியாகரெத்தினம், உப அதிபர், ,திருச்செல்வம், ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, ஆலோசகர் மு.ரெத்தினதுரை ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டனர்.

இதற்கு நிதி அனுசரணையை வழங்கிய அக்னிச் சிறகுகள் பேரவையின் ஆரம்பகால உறுப்பினர் .விஜேந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு இதை ஒழுங்குபடுத்திய பாடசாலை சமுகத்திற்கும், பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும், சாதனை படைத்த மாணவி சுரேஸ் மயூரா அவர்களுக்கும் அக்னிச் சிறகுகள் பேரவை சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது. 








SHARE

Author: verified_user

0 Comments: