எதிர்பார்த்தளவு புத்தாண்டு வியாபாரம் களைகட்டவில்லை.
தைப்பொங்கல் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை(14.01.2022) கொண்டாடவுள்ள இந்நிலையில் பல பாகங்களிலும் தைப் பொங்கல் வியாபாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகர்ப் பகுதியில் இவ்வருட தைப்பொங்கல் வியாபாரம் பெரிதும் களைகட்டியிருக்கவில்லை என வர்த்தகர்களும், பொதுமக்களும், கவலை தெரிவிக்கின்றனர். பொங்கல் பொருட்கள் தொடக்கும், மழிகைப் பொருட்ககள், மற்றும் ஆடைகள் வரைக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் மக்கள் பொருட்கள் வாங்குவதில் அதிகளவு நாட்டம் செலுத்துவது குறைந்திருப்பதாகவும், எனினும், தமது குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமாவது புத்தாடைகளைக் கொள்வனவு செய்வதங்காக வேண்டி தங்களிடமிருந்த சிறிய சிறிய தற்க ஆபரணங்களை நகைக்கடைகளிலும், மற்றும் வங்கிகளிலும், அடகு வைத்துவிட்டு குறைந்தளவான பொருட்களை மக்கள் இவ்வருடம் ஆங்காங்கே கொள்வனவு செய்துவருவதாகவும், வர்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வருட தைப்பொங்கலை முன்னிட்டு தமது முச்சக்கரவண்டிகளை வாடகைக்கு அமர்த்துபவர்கள் மிகவும் வெகுவாக குறைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சந்தையில் அனைத்துப் பொருட்களுக்கும் அதிக விலை நிலவுவதனால் மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை ஆங்காங்கே கொள்வனவு செய்து வருவதையும், கடந்த வருடங்களைப் போலல்லமல் களுவாஞ்சிகுடி நகரில் இம்முறை குறைந்தளவிலான மக்கள் கூட்டத்தையே அகவானிக்க முடிந்துள்ளது.
0 Comments:
Post a Comment