10 Jan 2022

மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்.

SHARE

மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல். 

அடிநிலைக் கிராம மக்களின் குறை நிலைகள்  மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்  ஞாயிற்றுக்கிழமை(09)  மட்டக்களப்பு பெரியபுல்லுமலை கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்றது . 

மட்டக்களப்பு   மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம மக்களின்  வாழ்வாதாரம் ,மாணவர்களின் கல்வி  மேம்பாடு , சுகாதாரம்  மற்றும் சட்ட ஆலோசனை போன்ற அடிப்படை தேவைகளை  தொடர்பான  சமூக மேம்பாட்டு உதவி மற்றும் வாழ்வாதார  வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .

அந்தவகையில் மட்டக்களப்பு பெரியபுல்லுமலை கிராம சேவையாளர் பிரிவுக்கு  களவிஜயத்தை மேற்கொண்ட மாவட்ட அருவி பெண்கள்  வலயமைப்பினர்  அக்கிராம மக்களின் அடிப்படை  குறை நிலை தேவைப்பாடு  மற்றும் சட்ட ஆலோசனை  தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து அக்கிராம  பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொதிகள்  மற்றும் கற்றல் உபகரணங்களும் , கிராம மக்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன .

மட்டக்களப்பு மாவட்ட அறிவு பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் , சட்டத்தரணியுமான மயூரி ஜனன்  தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மாவட்ட அறிவு பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் , கிராம பொது அமைப்புக்களை உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: